மாண்ட்ரேக் லினக்ஸ் மாண்ட்ரேக் லினக்ஸ் - நிறுவும் செயல்முறை தேவைப்படும் கணினி அமைப்பு * பெண்டியம் அல்லது நிகரான செயலகம் (processor) * சிடி இயக்கி (drive) * குறைந்தது 32 MB நினைவகம், 64 MB பரிந்துரைக்கப்படுகிறது. மாண்ட்ரேக் லினக்ைஸ நிறுவும் முறை மிக எளிமையானது. பெரும்பாலும், லினக்ஸ் சிடியை இயக்கியினுள்(cd drive) பொருத்தி கணினியை மறுதொடக்கம் செய்தால் போதும். குறிப்பு: * உங்களின் 7.0,7.1,7.2,8.0,8.1,8.2,9.0,9.1 அல்லது 8.1 லினக்ஸ் பதிப்பை மேம்படுத்த(Upgrade) வேண்டுமெனில், கோப்புகளை காப்பு நகல் (backup copy) எடுக்க மறவாதீர்கள். * உங்களிடம் லினக்ஸ் 7.0 க்கு முந்தைய பதிப்பு இருந்தால், மேம்படுத்த இயலாது. புதிதாக லினக்ைஸ நிறுவுதல் ஒன்றே வழி. ------------------------------------------------------- விண்டோசுக்கான லினக்ைஸ பயன்படுத்தி விண்டோஸ் 95/98/2000/ME அமைப்பிலேயே லினக்ைஸ நிறுவலாம். இதற்கு வன்வட்டு வகிர்தல் (disk partitioning) தேவையிருக்காது. ஒரு விண்டோஸ் அடைவில் (folder) லினக்ஸ் ஒரு கோப்பாக நிறுவப்பட்டிருக்கும். உங்கள் விண்டோஸ் அமைப்பை மாற்றாமல், லினக்ைஸ பற்றி தெரிந்து கொள்ள இது எளிய வழி. ஆனால் இந்த முறையில் லினக்ஸ் சற்று மெதுவாக வேலை செய்யும். மேலும் விண்டோசை நீங்கள் மீண்டும் நிறுவினால், லினக்ஸ் உங்கள் வட்டிலிருந்து அழிந்துவிடும். கீழ்கண்ட வழிகளில் மாண்ட்ரேக் லினக்ைஸ நிறுவலாம்: 1. நேரடியாக சிடியிலிருந்து தொடங்குதல். 2. விண்டோஸ் 95/98/2000/ME யில் நிறுவுதல். 3. விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டு(boot floppy disk) உருவாக்குதல். 4. பிற வழிகளில் நிறுவுதல். ------------------------------------------------------- 1. நேரடியாக சிடியிலிருந்து தொடங்குதல் நிறுவும் சிடியைப் பயன்படுத்தி லினக்ைஸ தொடங்கலாம். லினக்ஸ் சிடியை இயக்கியினுள் பொருத்தி, கணினியை மறுதொடக்கம் செய்யுவும். பிறகு, கணினித் திரையில் தோன்றும் ஆணைகளை பின்பற்றுங்கள். நிறுவுவதற்கு [Enter] விசையையும் உதவி கோப்பிற்கு [F1] விசையையும் அழுத்தவும். குறிப்பு: சில கணினிகளில், சிடியிலிருந்து தொடங்க முடியாமல் போகலாம். இது போன்ற சூழலில் தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும். விவரங்களுக்கு மூன்றாவது வழியைப் படியுங்கள். -------------------------------------------------------------------------- 2. விண்டோஸ் 95/98/2000/ME யில் நிறுவுதல் விண்டோசில் நிறுவும் போது வண்வட்டு வகிர் பிரித்தலை தவிர்க்கவும். நீங்கள் செய்ய வேண்டியது : 1. சிடியை இயக்கியினுள் பொருத்தவும். 2. உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். 3. மாண்ட்ரேக் லினிக்சின் திரை தோன்றியதும் [F1] விசையை அழுத்துங்கள். 4. தூண்டியில் linx4win என்று தட்டச்சு செய்து, [Enter] விசையை அழுத்துங்கள் . கணினித் திரையில் தோன்றும் ஆணைகளை பின்பற்றுங்கள். கூடுதல் விவரங்களை, இதைச் சார்ந்த readme.txt கோப்பில் காணலாம். குறிப்பு: விண்டோசிஸ் இயங்கிக் கொண்டிருக்கையில் சிடியை பொருத்தினால், சாளரம் (window) ஒன்று தோன்றும். இந்த சாளரத்தை பயன்படுத்தி நிறுவல் கோப்புகள், லினக்ஸ் பயன்மாதிரி(demo) நிரல்கள் மற்றும் உதவிநூல்களை பார்வையிடலாம். மேலும் மூன்றாவது வழியில் குறிப்பிட்டிருப்பது போல் தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க அனுமதிகிட்டும். சாளரம் தோன்றாவிடின், D:\dosutils\autorun.exe இயக்குங்கள் (D: உங்களது சிடியை குறிக்கும் எழுத்து). ------------------------------------------------------------------------------------------------------------- 3. விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்குவது. லினக்ஸ் சிடியை பயன்படுத்தி தொடங்க முடியாவிட்டாலோ அல்லது மேற்கூறிய வழிகள் பயனளிக்கவில்லை என்றாலோ, விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்குவது அவசியம். * சிடியை இயக்கியினுள் பொருத்தி, “MyComputer” குறும்படத்தை திறக்கவும். அதனை வலது சொடுக்கி, பட்டியலில், “Open”னை தேர்ந்தெடுங்கள். * ”dosutils” அடைவினுள் நுழைந்து, “rawwritewin” குறும்படத்தை இருமுறை சொடுக்குங்கள். * வெற்று(blank) நெகிழ்வட்டை இயக்கினுள் சொருகுங்கள். * இந்த நெகிழ்வட்டிற்கு “D:\Images\cdrom.img” என்ற கோப்பை rawwritewin மூலம் எழுதுங்கள் (D: உங்களது சிடியை குறிக்கும் எழுத்து). நிறுவுதலை தொடங்க: * சிடிவட்டையும், தொடங்கு நெகிழ்வட்டையும் இயங்கியினுள் பொருத்தவும். * கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். -------------------------------------------------------------------------------------------------------------- 4. பிற வழிகளில் நிறுவுதல். மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு பொருந்தவில்லையெனில் (உதா: கணினி வலையமைப்பில் லினக்ைஸ நிறுவுதல் அல்லது pcmcia சாதனத்தில் நிறுவதல்) தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும். * லினிக்ச்ின் (அல்லது யுனிக்ஸ் அமைப்பு) தூண்டிலில் $ dd if = xxxxx.img of = /dev/fd0 என்று தட்டச்சுசெய்யவும். அல்லது *விண்டோசிலிருந்து, மூன்றாவது வழியில் கூறிய ஆணைகளை பின்பற்றுங்கள், ஆனால் cdrom.img பதிலாக xxxxxx.img பயன்படுத்தவும் (கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் காண்க). அல்லது *DOS சிலிருந்து D:\> dosutils\rawrite.exe -f images\xxxxx.img -d A தட்டச்சுசெய்யவும். (D: உங்கள் சிடி drive யை குறிக்கும் எழுத்து). +---------------+----------------------------------------------------+ | cdrom.img | சிடிவட்டிலிருந்து நிருவும்போது | |---------------+----------------------------------------------------| | hd.img | வன்வட்டிலிருந்து(harddisk) நிறுவும்போது(லினிக்சில் அல்லது | | | விண்டோஸ் அல்லது ReiserFS கோப்பு ) | |---------------+----------------------------------------------------| | network.img | ftp/nfs/http யிலிருந்து நிறுவும்போது | |---------------+----------------------------------------------------| | other.img | install using seldom used hardware drivers | |---------------+----------------------------------------------------| | pcmcia.img | pcmcia சாதணங்களிலிருந்து நிறுவும்பொது | |---------------+----------------------------------------------------| | usb.img | USB சாதனம், USB கட்டமைப்பு adapters அல்லது | | | USB CDROM/CDRW's | |---------------+----------------------------------------------------| | blank.img | உங்கள் சொந்த லினக்ஸ் கருவைக்(kernel) கோண்டு | | | நிறுவினால் | +---------------+----------------------------------------------------+ கொடாநிலை வரைவியல்வழு நிறிவலை பயன்படுத்துவதில் சிரமமிருந்தால், உரைவழியைப் பயன்படுத்தி நிறுவலாம். மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும். பிறகு “text” என்று உள்ளீடுங்கள். ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் மாண்ட்ரேக் லினிக்ைஸ மீட்கவேண்டுமெனில், நிறுவல்சிடியைப் பொருத்துங்கள்(அல்லது சார்ந்த நெகில்வட்டு). மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும். இதில் தோன்றும் தூண்டியிலிருந்து(promt) மீட்பை தொடங்கலாம். மேலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களுக்கு http://www.linux-mandrake.com/drakx/README கோப்பை படிக்கவும். ------------------------------------------------------- நிறுவதலின் முக்கியமான கட்டங்கள்: 1. லினக்ஸ் சிடியை இயக்கியினுள் பொருத்தி (தேவைப்பட்டால் நெகிழ்வட்டை பயன்படுத்தவும்), கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். 2. மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும் [Enter] விசையை அழுத்தவும். பிறகு திரையில் தோண்றும் ஆணைகளைக் கவனமாக பின்பற்றுங்கள். 3. நிறுவுதல் முடிவுற்றபின் சிடியை வெளியே எடுங்கள் (நெகிழ்வட்டையும் வெளியே எடுக்கவும்). உங்கள் கணினி தானாகவே தொடங்கும். இல்லையெனில் நீங்களே தொடங்குங்கள். 4. மாண்ட்ரேக் லினின்ஸ் தொடங்கியவுடன் பயனர்பெயர் (username) அல்லது “root” பயன்படுத்தி நுழையவாம். முக்கிய குறிப்பு: இந்த “root” கணக்கைப் பயன்படுத்தி, கட்டுப்பாடற்ற அணுகலை (எந்த கோப்பையும் நீக்கலாம், திருத்தலாம், பெயர்மாற்றம் செய்யலாம்) பெறலாம். மைய அமைப்பை மாற்றவும், லினக்ைஸ நிர்வாகிக்க மட்டுமே இக்கணக்கை பயன்படுத்துங்கள். தினசரி பயன்பாட்டிற்கு ஒரு சாதாரன பயனர் கணக்கை பயன்படுத்துங்கள். பயனரை உருவாக்க, “userdrake” சாதனம் அல்லது “adduser” மற்றும் “passwd” கட்டளைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் மாண்ட்ரேக் லினக்ஸ் பயன்படுத்த எங்கள் வாழ்த்துக்கள். ------------------------------------------------------- மெலும் நிறுவுதல் சார்ந்த தகவல்களுக்கு மாண்ட்ரேக் லினக்ஸ் மடலாடற் குழுவில் கேள்வி பதில்கள் உள்ளன http://www.mandrakelinux.com/ தமிழ் லினக்ஸ் பற்றி அறிய http://groups.yahoo.com/tamilinix மின்னஞ்சல் :tamilinix@yahoogroups.com மொழிபெயர்த்தவர்; மஞ்சு